இந்திய ஓபன் பேட்மிண்டன்…சிந்து சாம்பியன்!!

டெல்லி:
இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டி இன்று டெல்லியில் நடந்தது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரீன் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் 21:-19, 21-:16 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா மெரீனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சிந்து. இப்போட்டி 46 நிமிடங்கள் நீடித்தது. ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் இறுதி சுற்றில் கரோலினா மெரீனை எதிர்த்து சிந்து மோதினார். இந்த போட்டியில் தோல்வி அடைந்த சிந்து வெள்ளி பதக்கத்தை பெற்றார். இந்நிலையில், இன்று நடந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் கரோலினா மெரீனை வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளார் சிந்து.


English Summary
PV Sindhu Beats Carolina Marin To Clinch Maiden India Open Crown