மாஸ்கோ

மெரிக்க அதிபர் 2020 தேர்தலில் ரஷ்யா தலையிடும் என ரஷ்ய  அதிபர் புதின்  நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வ்ரும் 2020 ஆம் வருடம் நடக்க உள்ளது.   இதில் தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.  இந்நிலையில் டிரம்ப் தனது வெற்றிக்காக உக்ரைன் தலையீட்டை விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.  இந்த தகவலை அமெரிக்கப் புலனாய்வு அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்புக்கு எதிராகப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் மீது ஒரு வழக்கு உள்ளது.   ஹண்டர் உக்ரைனில் எரிவாயு எடுக்கும் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்துள்ளார்.   இந்த வழக்கு விசாரணையை முடுக்கி விடுமாறு உக்ரைன் அதிபர் விளாதிமிர் லெவின்ஸ்கி இடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தகவலைக் கடுமையாக மறுத்துள்ளார்.   ஆயினும் ஜனநாயகக் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து  டிரம்ப் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.    கடந்த தேர்தலில் டிரம்ப் தனது வெற்றிக்காக அயல்நாட்டு உதவியை நாடியதாக ஏற்கனவே குற்றச்சாடு உள்ளது.  தற்போது அதே பாணியில் வெலியான தகவலால் அமெரிக்காவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு கூட்டத்தில்  கலந்துக் கொண்டார்.   அப்போது அவரிடம்  2020ல் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடுமா  எனக் கேள்வி எழுப்பப்பட்டது.   அதற்கு அவர் மெதுவான குரலில், “நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.  ஆம் ரஷ்யா அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும்.  யாருக்கும் சொல்லி விடாதீர்கள்” எனக் கூறியது கடும் சிரிப்பலையை உருவாக்கியது.