வாஷிங்டன்

ந்தியா உள்ளிட்ட பல கூட்டணி நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

 

 

 

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ் 400 ஏவுகணைகளை வாங்க உள்ளது.  இதற்காக 52 லட்சம் அமெரிக்க டாலர் அளவில் ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் வருடம் கையெழுட்தாகி உள்ளது.  இது அமெரிக்கா அறிவித்துள்ள பொருளாதார உதவி விதிகளுக்கு எதிரானது என்பதால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.   ஆனால் இந்தியா அவ்வாறு இல்லை எனத் தெரிவித்து வருகிறது.

வாஷிங்டனில் நடந்த அமெரிக்க ஆர்வலர் கூட்டத்தில்  பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்குவது இந்திய அரசின் தனிப்பட்ட முடிவாகும்.   ஆகையால் இந்தக் கொள்முதல் முயற்சிகளை  அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்” என பேசி உள்ளார்.   இது அமெரிக்க அதிகாரிகளின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று அமெரிக்க அரசு செய்தி தொடர்பாளர், “நாங்கள் ஏற்கனவே எங்களது கூட்டணி நாடுகள் மற்றும் நட்பு நாடுகளை ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தகமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளோம்.   அப்படி இருந்தும் பொருளாதார உதவி விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டும்” என எச்சரித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறிய ரஷ்ய ஏவுகணை கொள்முதல் குறித்த கருத்துக்கு அமெரிக்கா பதிலடி அளித்துள்ளதாகப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  அமெரிக்க அரசு தாங்கள் இந்தியாவைக் குறித்து ஏதும் சொல்லவில்லை எனவும் அதே  வேளையில் விதிமுறைகளை மீறி நடக்கும் எந்த நாட்டுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.