மாஸ்கோ
இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள ரஷ்ய அதிபர் புதின் வாழ்க்கைப்படம் ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது.

ரஷ்ய அதிபரான புதின் வாழ்க்கை ஏ ஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சினிமா படமாக தயாராகிறது. இப்படத்தில் புதினுக்கு பதிலாக போலந்தை சேர்ந்த நடிகர் ஒருவரை நடிக்க வைத்து, பின்னர் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் அவரது முகத்தை புதினாக மாற்றி உள்ளனர்.
இந்த படத்தில், புதினின் அரசியல் செயல்பாடுகள். உக்ரைன் மீது போர் தொடுக்க எடுத்த முடிவு உள்ளிட்ட அவரது வாழ்க்கையில் நடந்த பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்த திரைப் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்த படத்தின் டிரெய்லரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டு சர்வதேச கவனத்தை ஈர்க்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வர உள்ளது. இது விறுவிறுப்பான அரசியல் திரில்லர் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
[youtube-feed feed=1]