சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தொடங்கியுள்ள புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சார்பில் 1லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், அவர்களது வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது அதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் அதிக அளவில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணம் உதவித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மாற்றி அமைத்தது. இதற்கு தான் “புதுமைப் பெண்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள், உயர்கல்வியில் சேர்ந்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உறுதித்தொகை பெறுவர். 12ஆம் வகுப்பை முடித்து விட்டு அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து தங்களது உயர் கல்வியை மாணவிகள் தொடரலாம்.
இதற்கு புதுமைப்பெண் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5ந்தேதி) டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு லட்சம் மாணவிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களது வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது அதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது மாணவிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.