சபரிமலையில் புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம்

பரிமலையில், நேற்று  நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜையை காண சபரிமலையில் திரண்டனர்.

நேற்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில் கோவில் நடை  திறந்ததும், அய்யப்பனுக்குழு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து நிறைபுத்தரிசி பூஜைகளுக்கான சடங்கு தொடங்கியது.

கோவில் முன் உள்ள மண்டபத்தில், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, நெற்கதிர்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை, மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் தலைமையில் சுமந்து, கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து கோவிலுக்குள் தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பின், அய்யப்பனுக்க  வழக்கமான நெய்யபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து படி பூஜையும் நடைபெற்றது.

பின்னர் இரவு 10மணிக்கு சன்னிதானம் நடை அடைக்கப்பட்டது.
English Summary
Putharisi Puja in Sabarimala, Paddy offering of devotees