‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ‘புஷ்பா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோ டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்,இந்த படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.