புவனேஸ்வர்: கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் வரும் 23ம் தேதி திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோயிலை திறக்கலாமா என்பது பற்றி, முடிவு செய்ய கோயில் நிர்வாகம் தரப்பில் இன்று ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், 12ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட பூரி ஜெகன்நாதர் கோயிலை வரும் 23ம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோயிலை வரும் 23ம் தேதி திறக்கலாம் என்ற பரிந்துரையை ஒடிசா அரசுக்கு கோயில் நிர்வாகம் அனுப்ப உள்ளது. அதன் பின்னர் ஒப்புதல் கிடைத்ததும் கோயில் திறக்கப்படும் என்று தெரிகிறது.

அதேவேளையில், கோயில் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்பட்டாலும், 31ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஜனவரி 3ம் தேதி முதல் கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.