நாமக்கல்,

முட்டை கொள்முதல் விலையில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் முட்டை விலை குறைந்து வருகிறது.

சமீப நாட்களாக முட்டை விலையாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் காரணமாக சில்லரை விலை 6.50 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒருசில இடங்களில் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

முட்டை விலை உயர்வு காரணமாக அசைவ உணவகங்களிலும் முட்டை ஆம்லேட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.

அதுபோல,  சத்துணவு திட்டத்தின் சார்பாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த முட்டை நிறுத்தப்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், விலை உயர்வு காரணமாக முட்டை விற்பனை சரிவை நோக்கி சென்றது. இதையடுத்து, முட்டையின் விலை குறைக்கப்பட்டது.

அதன்படி கொள்முதல் 5.16க்கு நிர்ணயிக்கப்பட்ட விலை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது கொள்முதல் விலை 4.65க்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சில்லரை விலை கடைகளில் முட்டை விலை மீண்டும் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.