திருப்பதி
திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா காலத்தில் நேற்று முன் தினம் (புரட்டாசி மூன்றாம் சனி) 22000 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுத்த திருப்பதி கோவிலில் தற்போது மீண்டும் தரிசனம் தொடங்கி உள்ளது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறப்பு என்பதால் கோவிலில் தரிசனத்துக்கு அதிகம் பேர் வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இலவச தரிசனத்தைத் தேவஸ்தானம் ரத்து செய்தது.
குறிப்பிட்ட அளவில் ஆன்லைன் விரைவு தரிசன டிக்கட்டுகள் மட்டுமே தற்போது அளிக்கப்படுகிறது.
ஆயினும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்ப்டுகிறத்.
அவ்வகையில் நேற்று முன் தினம் புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
அன்று ஒரே நாளில் 22000 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
மீண்டும் ஏழுமலையான் தரிசனம் தொடங்கிய பிறகு அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்தது இதுவே முதல் முறையாகும்.