பஞ்சாப்,

டைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில்  அதிக இடங்களை கைப்பற்றி  காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனையொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைத்தது‘. மாநிலத்தின் 26-வது முதல்வராக அம்ரிந்தர் பதவி எற்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து பஞ்சாபில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பஞ்சாபில் அதிகரித்துள்ள போதை மருந்துகளை ஒழிப்பது குறித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மாநிலத்தில் புறையோடி உள்ள போதை மருந்து களை 4 வாரத்திற்குள் அறவே ஒழிக்க சிறப்பு பணிக்குழு (அதிரடிப்படை) அதிகாரிகளுக்கு உத்தர விட்டு உள்ளார்.

ஏற்கனவே, குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில்  இன்ஸ்பெக்டர் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில், தி பஞ்சாப் ஓபியாய்ட் டிபன்டன்சி சர்வே (PODS) எடுத்துள்ள சர்வேபடி, 2000ம் வருடத்தில் பஞ்சாபில் ஓபியம் எனப்படும் போதை பொருட்கள் அதிகளவு நடமாடியதாகவும், 2007ம் ஆண்டு 90 சதவிகிதத்தினர் போதைக்கு அடிமையாக இருந்த தாகவும், அதுவே 2012ம் ஆண்டு 50 சதவிகிதத்தினர் போதை மருந்துகளுக்கும், 50 சதவிகிதத்தினர் ஹெராயின் எனப்படும் போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சர்வே 2015ம் ஆண்டு எடுத்த சர்வே முடிவின்படி போதை மருந்துக்கு அடிமையானவர்களில் 90 சதவிகிதத்தினர் ஹெராயின் போதை பொருளுக்கு அடிமையாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் மாநில முதல்வர் 4 வார காலத்திற்குள் போதை பொருட்களை அறவே ஒழிக்க தனிப்படையினருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.