
அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 123 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
தொடக்கத்திலிருந்தே ரன்களை சேர்ப்பதற்கு திணறி வந்தது பஞ்சாப் அணி. அந்த அணியின் முக்கிய வீரர்கள் யாருமே அணிக்கான ரன்களை சேர்க்கவில்லை.
துணைக் கேப்டன் அகர்வால் 34 பந்துகளில் 31 ரன்களையும், கிறிஸ் ஜோர்டான் 18 பந்துகளில் 30 ரன்களையும் அதிகபட்சமாக அடித்தனர். பூரான் மற்றும் ராகுல், தலா 19 ரன்களை சேர்த்தனர்.
முடிவில், 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 123 ரன்களை மட்டுமே எடுத்தது பஞ்சாப் அணி.
கொல்கத்தா சார்பில், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Patrikai.com official YouTube Channel