சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே 9 மாவட்டங்களில் இரவு நேரம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பஞ்சாபில் 24 மணி நேரத்தில் 2387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.