சண்டிகர்: புலம்பெயர்ந்தோருக்கு கட்டணம் ரயில்வே நிர்வாகம் செலுத்தவில்லை என்று பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரி கூறி உள்ளார்.
கொரோனாவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல மாநிலங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் பல மாநிலங்களில் போராட்டங்களிலும் இறங்கினர். இதையடுத்து, அவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
அதற்கான கட்டண விகிதத்தில் 85 சதவீதம் ரயில்வேயும், எஞ்சிய 15 சதவீதம் மத்திய அரசும் செலுத்தும் என்றும் அறிவித்தது. இந் நிலையில் அரசு அறிவித்தது போன்று பல மாநிலங்களில் செயல்படுத்தப்படவில்லை என்று புகார்கள் எழுந்தன.
இந் நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் செலுத்தவில்லை, அரசு தான் செலுத்துகிறது என்று பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரி கூறி உள்ளார்.
இது தொடர்பாக கேபிஎஸ் சித்து என்ற அந்த அதிகாரி டுவிட்டரில் கூறி இருப்பதாவது: டிக்கெட் விலைக்கு இந்திய ரயில்வே 85 சதவீத பணத்தை செலுத்துகிறது என்று அதிகாரப்பூர்வ ஆவணம் யாரிடமும் இருந்தால், தயவுசெய்து அதை இங்கே பதிவிடுங்கள் என்று கூறினார்.