சண்டிகர்,
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவித இட ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
அம்ரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை தலைநகர் சண்டிகரில் நேற்று கூடியது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பஞ்சாப் அரசுப் பதவிகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உள்ளாட்சி மன்ற பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவித த்திலிருந்து 50 சதவிதமாக உயர்த்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகரித்து வழங்கவும் அமைச்சரவைக்குழு தீர்மானித்துள்ளது. மின்சாரம் 300 யூனிட்கள் வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.