ஏகே47க்கு இணையான துப்பாக்கி – இந்திய தயாரிப்பு

 

திருச்சி

ஏகே47க்கு இணையான துப்பாக்கி  – இந்திய ராணுவத்தளவாட தொழிற்சாலை தயாரித்தது. திருச்சியில் நேற்று மத்திய அரசின் நிறுவனமான ராணுவத்தளவாட உற்பத்தி ஆலையின் 216 ஆவது தொழிற்சாலைதினம் கொண்டாடப்பட்டது.

அப்போது ராணுவத் தளவாட தொழிற்சாலைகளில்  தயாரிக்கப்பட்ட 7.62x 39mm ரைபிள்களை சத்தீஸ்கர் மாநில காவல்துறை அதிகாரி ரட்டன்லால் ஜாங்கியிடம் ஆலையின் பொதுமேலாளர் அப்பாராவ் வழங்கினார்.  இது ஏகே 47 துப்பாக்கிகளுக்கு இணையான திறன் கொண்டது.

வாராங்கோன்,  புஸாவல் ஆகிய நகரங்களில் உள்ள  ராணுவத் தளவாட தொழிற்சாலைகளில் இது தயாரிக்கப்பட்டது.   இந்த துப்பாக்கி ஒரு நிமிடத்தில் 600 குண்டுகளை  உமிழும்  திறனும், 500 மீட்டர் தொலைவில் உள்ள எதிரியை சுட்டு வீழ்த்தும் திறனும் கொண்டது.  காஷ்மீர், சத்தீஸ்கர், உள்பட பல்வேறு மாநிலங்களில்   தீவிரவாதிகளுடன் சண்டையிட மத்திய அரசின் துணை ராணுவம்,  சி ஆர்பி எப், பிஎஸ் எப், போன்றவை இதுவரை ஏகே 47 ஐ பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


English Summary
Trichy factory churns out desi 'AK-47' rifles