ண்டிகர்

நிஜாமுதின் மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவாக தப்லிகி ஜமாத் அமைப்பினருக்குப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் சென்ற மாதம் தப்லிகி ஜமாத் அமைப்பினரின் மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டில் பல வெளிநாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.   அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்து அவர்கள் மூலமாக மாநாட்டில் கலந்துக் கொண்டோருக்குப் பரவி உள்ளது.

அவர்கள் அதன் பிறகு இந்தியாவில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றதால் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.  தற்போது நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 25%க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பலர் இன்னும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமறைவாக உள்ளனர்.  அனைத்து மாநில அரசுகளும் வேண்டுகோள் விடுத்தும் பலர் வெளி வராமல் உள்ளனர்.

பஞ்சாப் அரசு இவ்வாறு தலைமறைவாக உள்ள தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கு பெற்றோர் 24 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.   தவறுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.