பஞ்சாபை பின்பற்றி தமிழகஅரசும் தடை விதிக்குமா?

Must read

சென்னை:

ஞ்சாபில் சுங்கக்கட்டணம் வசூலிக்க அம்மாநில முதல்வர் கேப்டன்  தடை விதித்துள்ள நிலையில், அதை  பின்பற்றி தமிழகஅரசும் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது.

ஆனால், தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் ஏதும் தளர்வு கிடையாது, ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை நாடு முழுவதும் சுங்கக்கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கி உள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கப்டாத நிலையில், சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுவதால், அவர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும்  மத்தியஅரசின் நடவடிக்கைக்கு  கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில்  சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்திலும் இன்று ஊரடங்கு தளர்வு குறித்து தமிழகஅரசு அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த கூட்டத்தில், சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, ஊரடங்கு விலக்கப்படும் வரை தமிழகத்தில் சுங்கக்கட்டணத்துக்கு விலக்கு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

பஞ்சாப் சிங்கத்தின் அதிரடி நடவடிக்கை போல தமிழக முதல்வர் எடப்படியாரும், சுங்கக்fட்டணம் வசூலிக்க தடை விதிப்பாரா?

 

More articles

Latest article