சண்டிகர்: பஞ்சாபில் வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களின் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகளுக்கு அதிகளவு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel