ண்டிகர்

நாளை பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.

சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்றாகும்.   இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.    ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி  பெற்றுள்ளது.  இதற்கு  முன்பும் இங்கு பாஜக ஆட்சி புரியவில்லை என்பதும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி  பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.   இந்த கட்சியை சேர்த்த பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.   அவர் கடந்த 16 ஆம் தேதி அன்று பஞ்சாப் முதல்வராகப் பதவி ஏற்றார்.

அன்று அவர் மட்டுமே பதவி ஏற்றார்.  நாளை ஆம் ஆத்மி அரசின் மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.   இந்த பதவி ஏற்பு விழா பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற உள்ளது.  அமைச்சர்கள் மற்றும் இலாகா விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

[youtube-feed feed=1]