பெங்களூரு: மாரடைப்பு காரணமாக தனது 46வயதில் மணைமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் தானமாக வழங்கிய கண்களால் 4 பேர் ஒளிபெற்றுள்ளனர்.

இறப்பதற்கு முன்பு செய்த உதவிகளோடு, அவர் மறைந்த பிறகு செய்த காரியம் அனைவரையும் மேலும் உருக்கியுள்ளது. இறந்தும் அவர் செய்த மனிதநேயம் வெகுவாக பாராட்டப்படுகிறது

உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக புனித் ராஜ்குமார் இளவயதில் மரணத்தை ஏய்தினார். அவரது  மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் புனித் ராஜ்குமார் உயிருடன் இருக்கும் போது ஏராளமான உதபிவகளை செய்துள்ளதுடன், தனது கண்களையும் தானம் செய்திருந்தார். அதன்படி, அவரது இரு கண்களும் பெங்களூரூவில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது கண்கள் 4 பேருக்கு பொருத்தப்பட்டு இருப்பதாக,  “நாராயண நேத்ராலயா வைச் சேர்ந்த டாக்டர் புஜங்  ஷெட்டி தெரிவித்து உள்ளார். புனீத் ராஜ்குமாரின் கண்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

மறைந்தும், தனது கண்கள் மூலம் 4 பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார் புனித் ராஜ்குமார். இதுவல்லவோ மனிதநேயம்.