புனே,

புனேவில் நடைபெற்று வரும்  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது

முதல் மற்றும் 2வது இன்னிங்ஸ் போட்டி முடிவில் , ஆஸ்திரேலிய அணி  298 ரன்கள் முன்னிலை பெற்று 6 விக்கெட்டுகளும் கைவசம் வைத்திருந்தது.

நேற்றைய  2-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று தொடர்ந்து 3வது நாளாக ஆட்டம் தொடங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.  தொடர்ந்து 109 ரன்னில் அவுட் கொடுத்து வெளியேறினார்.

டெஸ்ட் மேட்சில் ஸ்டீவன் ஸ்மித்தின் 18வது செஞ்சுரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி  8 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி.  இந்திய அணியை விட 441 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அதையடுத்து இந்தியாவுக்கு 441 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.