புனே:
காராஷ்டிராவில் 6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்ததாக  டாக்டர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சட்டாரா  பகுதியை சேர்ந்தவர் 45 வயதான சந்தோஷ் பால். டாக்டரான இவர்  5 பெண்கள் உள்பட 6 பேரை ஊசியில் வீரியம் மிக்க மருந்தை செலுத்தி  கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
doctor
அங்கன்வாடி மையத்தில் வேலை செய்யும் மங்கள் ஜுதே என்ற 49 வயது பெண் ஜூன் 16 அன்று, புனேவில் அருகிலுள்ள வெய் பகுதியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சட்டார பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.  ஆனால், அவர் பேருந்து ஏறவில்லை. திடீரென மாயமாகிவிட்டார். மங்கள் ஜுதே மகாராஷ்டிரா பூர்வ பிரத்மிக் சிக்சிகா சேவா சங்கம் என்ற அமைப்பின் தலைவராவார்.
அவர் காணாமல் போனது பற்றி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் மங்கள் ஜுதேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மங்கள் ஜுதேவின் செல்போன் செயல்பாடுகளை தீவிரமாக  ஆராய்ந்த போலீஸார், , டாக்டர். சந்தோஷ் பாலின் வீடு இருக்கும் பகுதியில் இருந்துதான் சிக்னல் வருவதை கண்டறிந்தனர். இதையடுத்து டாக்டரை கண்காணிக்க தொடங்கினர்.
இதுகுறித்து, சந்தோஷ் பாலின் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸிடம் மற்றும் ஊழியர்களிடம் போலீஸார் ரகசிய விசாரணை  மேற்கொண்டனர்.
விசாரணையில் டாக்டர் பால்தான் மங்கள் ஜுதேவை கொலை செய்தது தெரிய வந்தது.  டாக்டர். பால்  மங்கள் ஜுதேவை கடத்தி வீரியம் மிக்க மருந்துகளை ஊசிமூலம் செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிரடியாக டாக்டர் சந்தோஷ் பால் கைது செய்யப்பட்டார். அவரிடம்  நடத்தப்பட்ட விசாரணையில்,  இதுவரை 6 பேரை கொலை செய்தது தெரியவந்தது.
body
இதுவரை 5 பெண்கள் மற்றும் ஒரு ஆணை கொலை செய்ததாக டாக்டர் பால் ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட சிலர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் மாயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கொலை செய்யப்பட்டவர்களின் சடலத்தை தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.
       ஆனால் எதற்காக 6 பேரை கொலை செய்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்காக கொலை செய்தாரா என்றும் விசாரைணை நடைபெற்று வருகிறது.