தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்கு சரக டிஸ்எஸ்பியாக பணியாற்றி வந்த சுவாமிநாதன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம்,புளியங்குடி டிஎஸ்பியாக சுவாமிநாதன் (வயது 48), கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பதவி ஏற்றார். அவரது பணி காரணமாக அப்பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார். இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியான நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 15 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். டிஎஸ்பியின் மரணம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.