பந்துகளை அடித்து ஆட அஞ்சுகிறார் புஜாரா – ஆலன் பார்டர் விமர்சனம்

Must read

சிட்னி: பந்துகளை அடித்து ஆடுவதற்கு புஜாரா அஞ்சுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர்.

இதேபோன்றதொரு விமர்சனத்தை ஆஸ்திரேலியாவின் மற்றொரு முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்கும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், 176 பந்துகளில் 50 ரன்களை எடுத்த புஜாரா, தனது மிக மெதுவான அரை சதத்தை டெஸ்ட் அரங்கில் பதிவு செய்தார். இதனையடுத்து அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆலன் பார்டர் கூறியுள்ளதாவது, “பந்துகளை அடித்து ஆடுவதற்கு அஞ்சுகிறார் சத்தீஷ்வர் புஜாரா. அப்படித்தானே? அவர், ரன்கள் அடிப்பதைவிட, களத்தில் அவுட்டாகாமல் நிற்பதிலேயே கவனம் செலுத்தினார்.

அவர் இந்தத் தொடரில் எந்த சிறந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் ரன்களை சேர்ப்பதற்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டார். அவரின் செயல் இந்திய பேட்டிங்கில் எதிர்மறை மனப்பாங்கையே ஏற்படுத்தியது. அவரால் ஆஸ்திரேலியப் பந்து வீச்சுக்கு சவால் விடுக்க முடியவில்லை” என்றுள்ளார் பார்டர்.

More articles

Latest article