சென்னை

புதுச்சேரி ஆளுநருக்கு அரசின் அன்றாட விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்னும் தீர்ப்பு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிகர்நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கு இடையே கடும் பனிப்போர் நிலவி வந்தது. அது சிறிது சிறிதாக வளர்ந்து கிரண் பேடியின் நடவடிக்கைகளைக் கண்டித்து முதல்வர்  நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் நிலையை அடைந்தது. அதை ஒட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில்

அந்த தீர்ப்பில் புதுச்சேரி நிகர் நிலை ஆளுநரான கிரண் பேடிக்கு அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட உரிமை இல்லை எனவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களும் எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு ஒன்றை அளித்து இந்த தீர்ப்புக்கு தடை உத்தரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது.

இந்த மறு சீராய்வு வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில்,  புதுச்சேரி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு அளித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது. ஆளுநர் அரசின் தினசரி நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. அந்த உரிமை அவருக்கு இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.