புதுடெல்லி: விரைவாக வளர்ந்துவரும் உலகின் பத்தாவது சந்தையாக இந்திய தலைநகர் புதுடெல்லி மதிப்பிடப்பட்டுள்ளது.

Knight Frank’s Prime Global Cities Index மதிப்பீட்டின்படி இந்த இடத்தைப் பிடித்துள்ளது டெல்லி. இந்த 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் மதிப்பிடப்பட்டதைவிட, தற்போது 3 இடங்கள் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நகரின் முக்கியப் பகுதியில் ஒரு சதுர அடி நிலம் ரூ.33,511 என்று மதிப்பிடப்பட்டது.

இப்பட்டியலில் பெங்களூரு 15 வது இடத்திலும், மும்பை 30வது இடத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் முதலாம் காலாண்டு பருவத்தில் பெங்களூர் 20வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த இரண்டாம் காலாண்டில் 5 இடங்கள் முன்னேறி 15வது இடத்தில் உள்ளது.

பெங்களூரில் ஒரு சதுர அடி நிலத்தின் மதிப்பு ரூ.19000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. Knight Frank’s Prime Global Cities Index -ன் படி, உலகின் 46 நகரங்களில் சொகுசு வசிப்பிட விலை மதிப்புகள் ஆய்வுசெய்யப்பட்டன.

ஆய்வுக்குட்பட்ட 46 நகரங்களில், 36 நகரங்களில் விலை உயர்வு ஏற்பட்டுள்ள விபரம் தெரிய வந்துள்ளது. அதேசமயம், இஸ்தான்புல் மற்றும் வான்கூவர் ஆகிய நகரங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.