சண்டிகர்: போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக, சண்டிகரில் போக்குவரத்து காவல்துறையால் வழங்கப்பட்ட டிவிஐஎஸ் அல்லது போஸ்டல் சலான்களில் 56,000 சலான்கள் வரை பதிலளிக்கப்படாமல் உள்ளன.

இ-சலான் நடைமுறை அமல் செய்யப்பட்டதிலிருந்து, சண்டிகர் போக்குவரத்து காவல் துறை, சாலை விதிமுறைகளை மீறியோர் அபராதம் செலுத்தும் வகையில் மொத்தம் 74,561 போஸ்டல் சலான்களை விநியோகம் செய்திருந்தது.

ஆனால், அவற்றில் சுமார் 56,000 சலான்களுக்கு தொடர்புடையவர்களிடமிருந்து பதிலைப் பெற முடியாமல் தவிக்கிறது போக்குவரத்து காவல்துறை. விதிமுறைகளை மீறியவர்கள் குறித்து முழுமையான விபரங்களைப் பெற முடியாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அவர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பதிவு முகவரிகள் போன்றவை அப்டேட் செய்யப்படாமல் உள்ளதே அதற்கு காரணம் என்று தெரியவருகிறது. எனவே, இவர்களை அணுகும் காவல்துறையின் முயற்சி வெற்றிபெறவில்லை. எனவே, அந்த சலான்களை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளது சண்டிகரின் போக்குவரத்து காவல்துறை.