புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல்வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து என்பவர் கடந்த வாரம் மாயமான நிலையில், அவரது கார் எரிந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு கண்டு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மாரிமுத்துவின் உடல் இறந்த நிலையில்சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் உதவியாளராக பணிபுரிந்தார்.அவர்  கடந்த சில நாட்களாக பணிக்கு வராத நிலையில், அவரது கார் எரிந்த நிலையில் திருவரங்குளம் அருகே வல்லநாடு கண்டெடுக் கப்பட்டது.  காரை சோதனையிட்ட காவல்துறையினர், அந்த காருக்குள் சில நகைகளும் எரிந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில்  மாரிமுத்து வைக் காணவில்லை என அவரது மனைவியும் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

இந்த நிலையில் மாரிமுத்துவின் உடல் மணல்மேல்குடி கடற்கரையில்  அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர் மாரிமுத்து என தெரியவந்தது. மாரிமுத்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.