புதுச்சேரி: புதுச்சேரி மாநில பட்ஜெட் இன்று மாநில முதல்வர் ரங்கசாமியால் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை உஉள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2025ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளில், கவர்னர் உரையாற்றினார். இதையடுத்து இன்று இன்று 2வது நாள் அமர்வில்,  நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி  2025 – 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, தாக்கல் செய்தார்.

மொத்தம்,   ரூ. 13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.

விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும்

ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.

அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.

வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரத்தில் அனைத்து நாட்களும் வழங்கப்படும்

6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ1000, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழப்பு ஈமச்சடங்கு தொகை ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரமாக உயர்வு.

புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும்.

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி நிதி ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 3 கோடியாக அதிகரிக்கப்படும்.

முதியோர் ஊதியம்பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூ. 20,000 ஆக அதிகரிக்கப்படும்.

புதுவையில் உள்ள அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும்.

கலை பண்பாட்டுத் துறை சார்பில் காரைக்கால் அம்மையார் பெயரில் விருது வழங்கப்படும்

உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.