புதுச்சேரி:

காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கட்சியின் ஆதரவாளர் செல்வகணபதி ஆகிய 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால் 3 பேரையும் சட்டப்பேரவை கூட்டத்துக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது. . இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 நியமன எம்எல்ஏக்களை புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதிக்க இயலாது என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.