புதுச்சேரி : புதுச்சேரி துறைமுகம் ரூ.304 கோடியில் மேம்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அமர்வில் புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், புதுச்சேரி துறைமுகம், .’சாகர் மாலா’ என்ற துறைமுக மேம்பாட்டு திட்டத்தின் மூலும், 304 கோடியில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது என, லோக்சபாவில் தெரிவித்தார்.
சாகர்மாலா திட்டத்தின்படி புதுச்சேரி துறைமுக மேம்பாட்டு திட்டம் 304.8கோடி ரூபாய் செலவில் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமான ரூ. 75 கோடியில் துார்வாருதல், கண்டெய்னர் பெர்த் அமைக்கவும், இரண்டாம் கட்டமான 59.60 கோடியில் அப்ரோஜ் ஜெட்டி, மெயின் ஜெட்டி, இதர உபகரணங்கள் அமைக்கவும், மூன்றாம் கட்டமாக 170.20 கோடியில் கண்டெய்னர் பெர்த் விரிவாக்கம், சாலை, பாலம் அமைக்கப்பட உள்ளது.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்பட பல்வேறு துறைகளின் அனுமதி பெற்று கடந்த 2020ம் ஆண்டு 44 கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி துறைமுகத்தில் சகார்மலா திட்டம் துவக்கப்பட்டு, மணல் துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது