புதுச்சேரி
தீபாவளிக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது 12 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ.490 வழங்கப்படும் எனப் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்குப் பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதையொட்டி 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க ரூ. 16.53 கோடி நிதியைப் புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ளது.