புதுச்சேரி

புதுச்சேரி அரசு பெஞ்சல் புயலுக்கான எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

.

நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கிறது. எனவே சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது.  புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் புதுச்சேரி துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுளது.

புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு.,

”கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கடற்கரை சாலையும் மற்றும் பல சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் 12 லட்சம் பேருக்கு மாவட்ட நிர்வாக சார்பில் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளோம். அவர்கள் தங்குவதற்கு தங்குமிடங்களும் தயாராக உள்ளன. உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புயல் தொடர்பாக உதவி கோர கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு 112, 1077 என்ற இலவச எண்கள் மற்றும் 94889 81070 என்ற வாட்ஸ்அப் எண்கள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்”

என்று விளக்கம் அளித்துள்ளது.