புதுச்சேரி,
நேர்மைக்கு பெயர் பெற்ற புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தான் சார்ந்துள்ள பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர்களை எம்எல்ஏக்களாக பதவி நியமனம் செய்த முயற்சித்தது தற்போது தெரிய வந்துள்ளது.
புறவாசல் வழியாக பாரதிய ஜனதா கட்சியினரை சட்டமன்ற உறுப்பினராக முயற்சித்த கிரண்பேடியின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி பாரதியஜனதாவில் சேர்ந்ததை தொடர்ந்து, அவருக்கு புதுச்சேரி மாநில கவர்னராக பதவி கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, புதுச்சேரி மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த, பாஜக தலைவர், பொருளாளரை எம்.எல்.ஏக்களாக பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் 3 பேரை எம்.எல்.ஏக்களாக அரசு நியமித்துக் கொள்ள சட்டம் வழிவகை செய்கிறது.
தற்போது அந்த பதவிக்கு, புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பாரதிய ஜனதா பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த பதவிகளுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், ஜெயக்குமார் ரெட்டியார், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் ஆகியோரை ஆளும் நாராயணசாமி தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனார், அரசின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்காமல், கிரண்பேடி பாரதியஜனதா கட்சியினர் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் பாரதியஜனதாவுக்கு மக்களிடையே ஆதரவு கிடையாது. இதைத்தொடர்ந்து பாரதியஜனதா கட்சியினரை புறவாசல் வழியாக ஆட்சியில் அமர புதுச்சேரி கவர்னரான, நேர்மைக்கு பெயர்பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி முயற்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
ஏற்கனவே கவர்னர் கிரண்பேடி பரிந்துரைக்கும் நபர்களை எம்.எல்.ஏ.வாக நியமிக்க தடை கோரி காங்கிரஸ் கட்சி எம்.எல்ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஜூலை 5-ந் தேதிக்கு விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.