புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 402 பேர் உயிரிழந்துள்ளனர். நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்று பாதிப்பு 16.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, சமீப நாட்களாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக அவரது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.