சென்னை: 2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காமரார் விருது இலக்கிய செல்வர் குமரிஅனந்தனுக்கும், திருவள்ளுவர் விருது மீனாட்சி சுந்தரத்திற்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான “அய்யன் திருவள்ளுவர் விருது”   பெங்களுரில் வாழ்ந்துவரும் மு.மீனாட்சி சுந்தரத்துக்கும், 2021ஆம் ஆண்டிற்கான “பெருந்தலைவர் காமராசர் விருது’ சொல்லின் செல்வர்  முனைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கிட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர் விருது  பெங்களூரில் வசிக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு முதன்மையானவர்களில் ஒருவர் ஆவார்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், இவர் பெருந்தலைவர் காமராசர் உடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராவார். விருது பெறும் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.