புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்க உள்ளது.

இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.