புதுச்சேரி மாணவி பாலியல் வழக்கில் கல்லூரி மாணவன் கைது

Must read

புதுச்சேரி:

9ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை வீசி, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாட்டுக்காரன்சாவடியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி புதுவை  ஜிப்மர் கேம்பஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த  நரேஷ் கல்லூரி மாணவனக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பரிட்சை முடிந்து வீட்டில் இருந்த மாணவியை கடந்த 5ந்தேதி அன்று, அவரது காதலன் வெளியே அழைத்துச்சென்று, சேதாரப்பட்டில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து அந்த மாணவிக்கு குளிர்பானத்தில்,மயக்க மருந்து கொடுத்துள்ளார். இதனால் மயங்கமடைந்த அந்த மாணவிகைய  தமது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையே மாணவி மாயமானதால் பதறிப் போன அவரது தாயார். ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க காவல்துறையினரும் சல்லடைப்போட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில், மயக்க நிலையில் இருந்த அந்த மாணவியை அவரது காதலர் மற்றும் நண்பர்கள் சாலையோரம் இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளனர். மயக்க நிலையில் வீட்டுக்கு வந்த அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது காதலர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாணவியை பலாத்காரம் செய்த நரேஷை சனிக்கிழமையன்று போலீசார் கைது செய்தனர். அவன் அளித்த தகவலின் படி ராஜா, வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், மூவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

More articles

Latest article