சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று பிற்பகல் அல்லது மாலை பொழுதில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையொட்டி, சென்னையில் நேற்று இரவு முதலே மழை கொட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

கனமழையை எதிர்கொள்ள சென்னையில் மட்டும் 10,000 நபர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இன்று தொடங்கி நாளை காலை வரை பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவித்தார்.

பெஞ்சல் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை  இன்றிரவு காற்றும் மழையும்  மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் துரிதமாக செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   சென்னையில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இன்று தொடங்கி நாளை காலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றவர்,  காற்றும் மழையும் அதிகமாக இருக்கும் என்பதால் முன் எச்சரிக்கையாக அவர் அறிவுறுத்தினார். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக கூறியவர், எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.