டில்லி:

ந்தவொரு பொதுத்துறை வங்கியையும் மூடும் திட்டமில்லை என்று மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்து வெளியிட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக சில பொதுத்துறை வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது. இதன் காரணமாக பொதுமக்களிடையே பரபரப்பு நிலவி வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், அதன் துணைவங்கிகளான ஸ்டேப் பாங்க் ஆப் மைசூர், பிகானிர், திருவாங்கூர்  போன்ற சில வங்கிகள் இணைக்கப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் நாட்டில் உள்ள 15 பொதுத்துறை வங்கிகள் மற்ற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின.

இந்நிலையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளன. அதில்,  எந்த ஒரு அரசு வங்கியையும் மூடும் திட்டமில்லை என்றும்,  மேலும் ஒரு சில பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக வெளியான தகவல் பொய் என்றும், வங்கி நிதிநிலைமை தொடர்ந்து வலுவுடன் உள்ளதை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.