நாகர்கோவில்,

ன்னியாகுமாரி மாவட்டத்தில் தற்காலிக ஓட்டுநரை வைத்து பஸ்ஸை ஓட்ட முயன்றபோது  பஸ் விபத்துக்குள்ளானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் ஸ்டிரைக் காரணமாக 90 சதவிகித பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதன் காரணமாக சும்மா கிடந்த ஓட்டுநர்களை அழைத்து, அதிக சம்பளம் கொடுப்பதாக கூறி பஸ்களை இயக்க முயற்சித்து வருகிறார்கள் அதிகாரிகள்.

இந்நிலையில் இன்று காலை  திருவட்டாறு பேருந்து பணிமனையில் இருந்து, பஸ்களை இயக்க தற்காலிக பேருந்து ஓட்டுநர் ஒருவர் மூலம்  அதிகாரிகள் பஸ்ஸை எடுக்க முயன்றனர்.

அப்போது, அந்த  பஸ் ஓட்டுநர் கண்ட்ரோலில் நிற்காமல் பணிமனையில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

பணிமனையிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் இவரை போன்ற தற்காலிக  டிரைவர்களை கொண்டு இயக்கி வரும் பேருந்துகள் எந்த அளவுக்கு பாதுகாப்பு மிக்கது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுபோன்ற தற்காலிக ஓட்டுநர்கள் மூலம்  அரசு,  பொதுமக்களின் பாதுகாப்பில் விளையாட வேண்டாம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.