சென்னை:

ஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன் 2” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது , சென்னை திருவல்லிக்கேணியில் ஈஸ்வர்தாஸ் தெருவில் நடக்கிறது.

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அந்தத் தெருவல் திடீரென படப்பிடிப்பை நடத்த ஆரம்பித்ததால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிக்க முயன்றனர்.

காவல் நிலையத்தில் புகார் அளித்த செய்தியாளர்கள்

அப்போது படப்பிடிப்பு குழுவினர் செய்தியாளர்களை தாக்கினர். இதில் புகைப்பட கலைஞர்கள் எஸ்ஆர்.ரகுநாதன். மற்றும் பரத் ஆகியோருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.