சென்னை: தமிழ்நாடு காவல்துறை மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், காவல் துறையை சிறப்பாகச் செயல்பட பொதுமக்கள் இருந்து ஆலோசனை சொல்லலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளி யிட்டு உள்ளது.
தமிழகத்தில் காவல் துறையை சிறப்பாகச் செய்ய பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை தமிழ்நாடு காவல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரிலோ, தபால் மூலமோ, இ-மெயில் வாயிலாகவா, தொலைபேசி வாயிலாகவோ தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம், சாதிய வன்முறை, கொலைகள் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுபோல, அரசு மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்தால், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், நள்ளிரவு கைதுகளும், போராடுபவர்களை காவல்துறையைக் கொண்ட ஒடுக்குவது போன்ற சம்பவங்களுக்கும் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினரின் இதுபோன்ற நடவடிக்கைளால், பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும், நீதிமன்றங்களும், தமிழ்நாடு காவல்துறையை பல வழக்குகளில் கடுமை யாக விமர்சனம் செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் காவல் துறை சிறப்பாக செயல்பட பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற உள்ளதாக தமிழ்நாடு காவல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு கடந்த 2022ம் ஆண்டு 5வது காவல் ஆணையம் (Police Commission) அமைத்துள்ளது. இந்த ஆணையம் அசோகர் காவல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. காவல் பணிகளை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிகக்கு தபால் மூலம் தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளது. மேலும் fifthpolicecommissioner@gamil.com என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், டிசம்பர் 5ந்தேதி ( 5-12-2023) அன்று காலையில் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேரில் வந்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் அன்றும், காவல்கண்காணிப் பாளரின் 9791987112 என்ற தொலை பேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
தலைவர், 5வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக்நகர், சென்னை – 83