மும்பை:

ஸ்மார்ட் போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஆஹத் நிஜாம் தன் தாயார் மூலம் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கில், பப்ஜி விளையாட்டு வன்முறையையும் சைபர் குற்றத்தையும் தூண்டுகிறது.

இந்த விளையாட்டை போனில் விளையாடுவதற்கு தமிழகத்தில் உள்ள விஐடி பல்கலைக் கழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா  முழுவதும்  இந்த விளையாட்டை விளையாட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஆஜாரன மத்திய அரசு வழக்கறிஞர், பப்ஜி விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.