ம்பால்

ம்பால் நகரில் நடந்த மோடியின் பேரணிக்காக மக்கள் காக்க வைக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி உள்ளது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் கட்சிகள் தேர்தல் பேரணிகள் நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி பல இடங்களில் தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொள்கிறார். கடந்த 7ஆம் தேதி அன்று பாஜக சார்பில் மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் ஒரு பாஜக பேரணி நடந்தது.

இந்த பேரணியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த பேரணிக்கு வந்திருந்த மக்களை மோடி உரையாற்றி முடியும் வரை அங்கிருந்து வெளியேற முடியாமல் காவல்துறையினர் தடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர்கள் அங்கு வலுக்கட்டாயமாக தங்க வைத்தததாக சமாஜ்வாதி கட்சியினரால் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் டாக்ஸ் என்னும் டிவிட்டர் பக்கத்தில் இந்த பேரணி குறித்த செய்தி வீடியோவுடன் பதியப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேரணி மைதானத்தை விட்டு வெளியேறும் மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவது பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை குறிப்பிட்டு அளிக்கப்பட்ட புகாரில் இது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/ManipurTalks/status/1114879841340256256?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed&ref_url=https%3A%2F%2Fd-34374497072465190696.ampproject.net%2F1904091426070%2Fframe.html

 

இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இம்பால் நகரில் நடந்த மோடியின் பேரணியில் மக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப் பட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மணிப்பூர் காவல்துரை சூப்பிரண்டிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட அந்த நோட்டிஸ் மாநில பாஜக தலைமைக்கும் அனுப்பப் பட்டுள்ளது.