ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரை சேர்ந்த 3  செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான்  விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று மாலை தொடங்குகிகறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (isro) அதிக தெளிவுடன் ஒரே நேர்த்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் டிஎஸ்-இஓ (DS-EO) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், என்இயு-சாட்(NeuSAR, SAR), ஸ்கூப் 1உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம்  விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில்,  நாளை ( ஜூன் 30 ஆம் தேதி) மாலை 6மணி அளவில்,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து செலுத்த தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு,  25 மணி நேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

இதில் செலுத்தப்படும் புவி கண்காணிப்பு செயற்கை கோளான DS-EO என்பது 365 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள். மற்றொரு செயற்கை கோளான  NeuSAR ஆனது 155 கிலோ எடை கொண்டது. இவை இரண்டும் சிங்கப்பூரை சேர்ந்தவை எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், மூன்றாவது செயற்கைக்கோள் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTU) 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1  ஆகிய 3 செயற்கை கோளையும் இஸ்ரோ  விண்ணுக்கு செலுத்துகிறது.