சென்னை:

ரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது.

சோதனையின்போது,  ரூ.14.54 கோடி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக  பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கிடைத்த ஆவணங்கள் குறித்து சரிபார்க்கும் பணி தொடர்ந்து வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறை கண்டிட காண்டிராக் நிறுவனமான பிஎஸ்கே நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள், உரிமையாளர்களின் விடுகள், அந்த நிறுவனத்தோடு தொடர்புடைய பைனான்சியர்கள் வீடு உள்பல பட இடங்களில் கடந்த 12ந்தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்தே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.  சோதனை, 3-வது நாளாக இன்றும்  தொடர்கிறது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த நடுக்கோம்பை மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளரின் வீடு, உறவினரின் அலுவலகம் உள்ளிட்ட இந்த இடங்களில் நடைபெற்றுவரும் சோதனையில், வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்களில் 4 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், மதுரையில் உள்ள பிரபல கட்டுமான தொழிற்சாலையில் 2 நாட்களாக நடைபெற்றுவந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்தது. மதுரை தெப்பக்குளம் அருகே ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள கட்டுமான தொழிற்சாலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், ணம் மற்றும் ஆவணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டில், வேலூருக்கு அடுத்து, மிகப்பெரிய அளவிலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது பிஎஸ்கே குழுமத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.