காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தேவைப்படும் மருத்துவமனைகள், தனி நபர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அடுத்த நாச்சியாபுரத்தில், GULF ENGINEERING தொழில் நிறுவனம் 2012 முதல் ( LCV ) இலகு ரக வணிக வாகனங்களுக்கான கட்டுமான பணிகளை செய்துவருகிறது. இந்நிறுவனம், அதன் இலகு ரக வாகனம் விற்பனை வளர்ச்சியால் தனது சொந்த டத்தில் இப்பணியை விரிவுபடுத்தியது. அதை தொடர்ந்து, கம்பனூரில் பள்ளி பேருந்துகளை சீர்செய்யும் விதத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்கம் செய்தது.
இந்நிறுவனம், தற்போது COVID -19 பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் OXYGEN பற்றாக்குறையை கருத்தில் கொண்டு PSA தொழில்நுட்பத்தால் OXYGEN உற்பத்தி செய்யும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இது, இயற்கை காற்றில் இருந்து NITROGEN பிரித்து எடுத்து வெளிஅனுப்பி விட்டு OXYGEN காற்றை மட்டும் தூய்மை படுத்தி, பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு sterile பில்டர் பயன்படுத்தி தூய்மையான OXYGEN காற்றை நேரடியாக மருத்துமனை பயன்பாட்டிற்காக தருகின்றது.
இந்நிறுவனம், மாடல் M30E மூலம், முப்பதாயிரம் லிட்டர் oxygen ஒரு நாளில் தயாரிக்க முடியும். MODEL M100E மூலம் நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் oxygen தயாரிக்கமுடியும். இது தற்போதைய 12 லிட்டர் oxygen சிலிண்டர் கணக்கில் பார்த்தால் 55 சிலிண்டர் அளவாகும்.
இதன் பாகங்கள் அனைத்தும் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இதன் தரம் இதன் போட்டி உற்பத்தியாளர்களைவிட உயர்வானது. இது, EU தரத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் இரண்டு வருட உத்திரவாதத்துடன், வருடாந்தர பராமரிப்பு சேவையும் உள்ளது.
இந்நிறுவனம், தமிழக அரசின் அனைத்து அரசு மருத்துவமனைக்கும் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வாடைக்கு இந்த இயந்திரங்களை தர விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம், அரசிற்கு உடனடி முதலீடில்லாமல் வாடகை அடிப்படையில் OXYGEN பெறமுடியும் என்பதை அதன் நிர்வாகிகள் தெளிவுபடுத்தி உள்ளார்கள். மேலும், தனியார் மருத்துவமனைக்கு இந்த இயந்திரம் இந்த பேரிடர் காலத்தில் பேருதவியாய் பயன்படும் என்பதை இந்நிறுவனத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்த நிறுவனம், இதன் வாடிக்கையாளர்களுக்கு தமிழக அரசின் 30% மானியத்துடன் வங்கி கடனுடன் இந்த இயந்திரங்களை விநியோகிக்க தயாராக உள்ளது.
தனியார் மருத்துமனைகளுக்கும் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் இந்த இயந்திரங்களை வாடகைக்கு தரவும் தயாராக உள்ளது.
தேவைப்படுவோர்கள் கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இதன் வணிக விவரங்களுக்கு 82708 90371 மற்றும் 99430 13490 தொடர்புகொள்ளவும்.
இணையத்தளம் : www.gulfengineering.in ; மின்னஞ்சல்: info@gulfengineering.in