சென்னை
கொரோனா பலி எண்ணிக்கை இந்தியாவில் 600 ஐத் தாண்டியுள்ளது. இரவு பகல் பாராது கொரோனாத் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாத் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட மக்கள் பணியாளர்களுக்கு சர்வதேச தரத்திலான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனை வலியுறுத்தியுள்ள அவர், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் சிலரும் அத்தொற்றால் பலியாகி வருவது வருந்தத்தக்கது எனவும் அக்கடிதத்தில் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார்.